Site icon Radical Sri Lanka Tamil

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

எனினும், மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை காரணமாக, நேற்று (22) இரவு கண்ணீர்ப்புகைத் தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று என பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கைதியை வேறொரு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தபோது இந்த பதற்றமான நிலைமை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது, ஒரு கூண்டில் இருந்து வெளியே வந்த சுமார் 500 கைதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியின்மையுடன் நடந்து கொண்டதால் இந்த நிலைமை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version