IMF ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
மேலும் IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியால் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்தத் திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளனர்.
அதன்படி, இந்த மதிப்பாய்வு IMF நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டவுடன், இலங்கைக்கு 344 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.