ஐரோப்பிய சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தரவுள்ளது. இலங்கையின் பொருளாதார முன்னேற்றங்களை மீளாய்வு செய்து புளுP வரிச் சலுகை குறித்தான தீர்மானங்களை எடுப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
எதிர்வரும் 7ம் திகதி வரை அவர்கள் நாட்டில் தங்கியிருப்பர். குறித்த காலப்பகுதியில் அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள், சிவில் சமூகத்தினர் , தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட தரப்பினரை ஐரோப்பிய சங்க அதிகாரிகள் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.