11.7 C
New York

Published:

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி அநாவசியமான முறையில் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி வைத்துள்ளார்.

அத்தனகல்ல பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கதிரை சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுண கட்சி வேட்பாளர்கள் சிலர் தமது புகைப்படத்துடன் லசந்த அழகியவண்ண மற்றும் சரண குணவர்தனவின் புகைப்படங்களை இணைத்து கையேடுகளை பகிர்வதாகவும் இதற்கு எந்தவொரு அனுமதியையும் தான் வழங்கவில்லையெனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கதிரை சின்னத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் தனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாமென ஏற்கனவே கூறியுள்ளதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Related articles

spot_img

Recent articles

spot_img