Site icon Radical Sri Lanka Tamil

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும், தங்காலை மருத்துவமனை மற்றும் பெலியத்த ஹத்போதிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து இன்று (29) காலை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version