மே 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கான இறுதி நாளாக இன்று காணப்படுகிறது.
இம்முறை உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், 25 மற்றும் 28 ஆம் திகதிகளிலும் இதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவடைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.