11.7 C
New York

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

Published:

பாணந்துறை ஹிரண பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் , ஒருவர் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஹிரண பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related articles

spot_img

Recent articles

spot_img