சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (1) விசேட பொலிஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக இந்த திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, கொழும்பில் 15 இடங்களில் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.