உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை இதுவரை பெறாத வாக்காளர்கள் இன்று (30) முதல் தபால் அலுவலகம் அல்லது உப தபால் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தபால் அலுவலகம் அல்லது உப தபால் அலுவலகத்திற்குச் சென்று தங்கள் அடையாளத்தை சரிபார்த்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையைப் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதித் தபால் மா அதிபர் பிரேமச்சந்திர ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று முதல், 339 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை மே 6 ஆம் திகதி மாலை 4 மணி வரை தபால் அலுவலகம் அல்லது உப தபால் அலுவலகத்தில் பெறலாம் என பிரதித்தபால் மா அதிபர் பிரேமச்சந்திர ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.