Site icon Radical Sri Lanka Tamil

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடு

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று(01) விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மே தின பேரணிகள், கூட்டங்கள், நினைவேந்தல்களால் வாகன நெரிசல் ஏற்படுமாயின் அந்த பகுதிகளை தவிர்த்து மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொழும்பு நகரில் 15 இடங்களில் மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

காலிமுகத் திடல், ஆமர் வீதி, வாழைத்தோட்டம், ஈ.ஏ.குணசிங்க நினைவிடத்தை அண்மித்த பகுதி, பீ.டி.சிறிசேன மைதானம், தபால் தலைமையகம், ஹைட்பார்க் மைதானம், பொது நூலகம், விஹாரமஹாதேவி பூங்கா, புனித மைக்கல் தேவாலயம், கொழும்பு மாநகர மண்டபம், பலாமரச்சந்தி, எல்விட்டிகல சந்தி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று(01) மே தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Exit mobile version