Site icon Radical Sri Lanka Tamil

ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு திடீர் இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று (01) முதல் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடமாற்றத்திற்கான அனுமதி பொலிஸ் ஆணைக்குழுவிடம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரதான பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவில் 23 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version