9.7 C
New York

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: மீண்டும் ஆட்சியை பிடித்தது ஆளுங்கட்சி

Published:

சிங்கப்பூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று  (3) நடந்தது. இதில் 97 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 12 உறுப்பினர்கள் நியமன அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

அதன்படி சிங்கப்பூரில் நேற்று 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. 30 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவுசெய்தனர்.

 

இந்தத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் போட்டி நிலவியது. ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது.

 

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில்  வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமர் ஆகிறார்.

 

பிரீத்தம் சிங் தலைமையிலான எதிர்க்கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

 

கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

spot_img

Recent articles

spot_img