இலங்கை இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் இடம்பெறும் முக்கோண ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டி நேற்றைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது.
இலங்கை – இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கட்டுக்களால் அபார வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றது. ஹசினி பெரேரா அதிகபட்சமாக 30 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் ஸ்னேஹ் ரானா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார். தீப்தி சர்மா மற்றும் ஸ்ரீ ச்சாரனி ஆகியோர் தலா இரு விக்கட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 29.4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து இலக்கையடைந்தது. பிரதிகா ராவல் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் ஹர்லீன் தியோல் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.