லெபனான் தலைநகர் பேய்ரூட்டின் தென் பகுதி மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது. பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினரால் குறித்த பகுதி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த தாக்குதலுக்கு லெபனான் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.