11.7 C
New York

நாடெங்கிலும் மே தினப் பேரணிகள்

Published:

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள் என்பன நாளை வியாழக்கிழமை (01) மே தினக் கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளன.

அதற்கமைய, தேசிய மக்கள் சக்தி அதன் மே தினக் கூட்டத்தை, ‘நாட்டைக் கட்டியெழுப் பும் மக்கள் சக்தி அணி திரளும்’ என்ற தொனிப் பொருளில் மாலை 3.30 மணிக்கு கொழும்பு, காலி முகத்திடலில் மே தினக் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியும் பொதுக் கூட்டமும் ‘கிராமத்தை வெல்லும் போராட்டத்தின் தொழிலாளர்களின் பலம்’ என்ற தொனிப்பொருளில் பிற்பகல் 2.00 மணிக்கு தலவாக்கலையில் முன்னெடுக்கவுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன கொழும்பில் தமது மே தினக் கூட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.  இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் அவிசாவளையில் மே தினக் கூட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதுடன் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை, வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் மன்னாரில் மே தின நிகழ்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் திட்ட வரைபு ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சர்வசன அதிகாரம், தேசிய சுதந்திர முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட மேலும் பல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மே தினக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது.

Related articles

spot_img

Recent articles

spot_img