Site icon Radical Sri Lanka Tamil

ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச் சூடு – அமெரிக்கா, ரஷ்யா கண்டனம்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் இங்கு சுற்றுலா வருவார்கள்.

இந் நிலையில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலையின் பைன் மரக்காட்டு பகுதியிலிருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன்  இறங்கி வந்தனர். அவர்கள், அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர்.

இதில்40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.பயங்கரவாதிகளைப் பார்த்ததும் சுற்றுலா வழிகாட்டிகளும், குதிரைகளை சவாரிக்கு கொண்டு வந்த உள்ளூர்காரர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்ததும் இராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் பொலிஸார் சம்பவ இடம் நோக்கி விரைந்துள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயங்கர என்கவுண்ட்டர் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும் மீட்பு பணிக்காக ஹெலிகொப்டரும் அனுப்பிவைக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு பஹல்காம் வைத்தியசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டனர்

பயங்கரவாதிகள் தாக்குதலில் 28 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், சவுதி அரேபியா, இத்தாலி, உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version