Site icon Radical Sri Lanka Tamil

பாப்பரசரின் இறுதிச்சடங்கில் ட்ரம்ப்-ஸெலன்ஸ்கி சந்திப்பு

வத்திக்கான் நகரில் நடைபெற்ற பாப்பரசரின்  இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ட்ரம்ப்-ஸெலன்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

உக்ரைன் மீது 2022ஆம் ஆண்டு ரஷ்யா போர் தொடுத்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக பல ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன.

அதேபோல் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் உக்ரைன் ஜனாதிபதி   ஸெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

 

வத்திக்கான் நகரில் நடைபெற்ற பாப்பரசரின்  இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ட்ரம்ப்-ஸெலன்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

15 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது போரை நிறுத்துவது தொடர்பாக அவர்கள் விவாதித்தனர். இந்த சூழ்நிலையில் உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதும்  குறிப்பிடத்தக்கது.

Exit mobile version