பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால் 5 நாட்களில் 600 இந்திய விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருப்பது தெரிய வந்துள்ள நிலையில் அந்நாட்டுக்கு எதிரான பல நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
தாக்குதலை தொடர்ந்து 24 ஆம் திபதி முதல் பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டது. தற்போது கடந்த 5 நாட்களில் மட்டும் இந்திய விமான நிறுவனங்களின் 600 விமானங்கள் திருப்பி விடப்பட்டிருக்கின்றன. இந்த விமானங்கள் சர்வதேச நாடுகளுக்கு செல்பவையாகும்.