Site icon Radical Sri Lanka Tamil

பல்கலை மாணவ மரணம் : பாரபட்சமற்ற விசாரணை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரான 23 வயது சரித் தில்ஷானின் துயர மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சம்பவம் குறித்து FUTA தனது ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, மாணவரின் மரணத்திற்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையின் அவசரத் தேவையை வலியுறுத்தியது.

பல்கலைக்கழகத்திற்குள் நடந்த ஒரு பகிடிவதை சம்பவத்தால் மாணவரின் மரணம் ஏற்பட்டதாகக் கூறப்படுவதையும், இந்த விவகாரம் குறித்து உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் FUTA வின் செயலாளர், மூத்த விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க வலியுறுத்தினார்.

இதேவேளை, குறித்த மாணவின் உயிரிழப்புக்கு சப்ரகமுவ பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் இரங்கல் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

Exit mobile version