Site icon Radical Sri Lanka Tamil

ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் விஜயம் குறித்து வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட பல மூத்த பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி கலந்து கொண்டு, முக்கிய உரையை நிகழ்த்துவார் என்று அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஜனாதிபதி கையெழுத்திடுவார் என்றும், வர்த்தக சமூகத்துடன் இணைந்துக் கொள்ள ஜனாதிபதி எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அதில் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இராஜதந்திர உறவுகளின் 55 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிலையில், வியட்நாம் விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version