Site icon Radical Sri Lanka Tamil

அம்பலங்கொடை காவல்துறையினர் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை – கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த இளைஞர், நேற்று முன்தினம் கொஸ்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்த குறித்த இளைஞர், காவல்நிலையத்தில் சுகவீனம் காரணமாக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்தார்.

இருப்பினும், குறித்த இளைஞனின் பெற்றோர் தங்கள் மகன் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Exit mobile version