Site icon Radical Sri Lanka Tamil

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகள் அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜெயலத் கூறியுள்ளார்.

காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்தியரை பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த இரண்டு நோய்களும் ஒரே நுளம்பால் பரவுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளில் 50% மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version