Site icon Radical Sri Lanka Tamil

இன்று நள்ளிரவு முதல் தேர்தல் பிரச்சார அமைதி காலம்

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்துக்கு பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக எந்தவொரு வேட்பாளரும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று இடம்பெறும் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டங்களின் காணொளி மற்றும் மேலதிக விபரங்களை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பிரதான ஒரு செய்தியில்  மாத்திரம் பிரசுரிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version