Site icon Radical Sri Lanka Tamil

’’லொக்கு பெட்டி’’ அழைத்துவரப்பட்டார்

தெற்கில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான “லொக்கு பெட்டி” என்றழைக்கப்படும் லந்துவஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா, குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் குழுவால் பெலாரஸிலிருந்து துபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை (04) அழைத்து வரப்பட்டார்.

அவர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர், ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தின் 7வது படைப்பிரிவில் பணியாற்றியவர்.

கிளப் வசந்தா கொலை, கொலைகள், துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான குற்றங்களுக்காக அவர் மீது இந்த நாட்டின் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர், பெலாரஸிலிருந்து துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து, ஞாயிற்றுக்கிழமை (04) காலை 7.48 மணிக்கு ஃப்ளைடுபாய் FZ-579 விமானத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டார்.

அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவரை நுகேகொடையில் உள்ள மேற்கு தெற்கு குற்றப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
Exit mobile version