Site icon Radical Sri Lanka Tamil

ட்ரம்ப் எச்சரிக்கை!

‘ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்’ என அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். மேலும், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்தால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

தற்போது ஈரானுடன் வர்த்தக உறவு வைத்திருக்கும் நாடுகளுக்கு  ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈரான் எண்ணெய் அல்லது பெட்ரோ இரசாயன பொருட்களின் அனைத்து கொள்முதல்களும் இப்போதே நிறுத்தப்பட வேண்டும்.

ஈரானில் இருந்து எந்த அளவு எண்ணெய் அல்லது  இரசாயனங்களை  வாங்கினாலும், அந்த நாடு அல்லது நபர் உடனடியாக இரண்டாம் நிலை தடைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அவர்கள் அமெரிக்காவுடன் எந்த வகையிலும், வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும்.இந்த விடயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி. இவ்வாறு ட்ரம்ப்  கூறியுள்ளார்.

Exit mobile version